News
APRIL 2025

குரு உபதேசம் 4351
முருகப்பெருமான் திருவடி பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால் :
விவசாயிகள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், அலுவலர்கள் என அனைவரது பிரச்சினைகளுக்கும் ஞானபண்டிதனை வணங்க வணங்க ஞானபண்டிதன் ஆட்சியாம் சித்தர்கள் ஆட்சி மலர்ந்து உடனடியாக அவரவர் பிரச்சினைகளெல்லாம் முருகனது அருளாலே தீர்க்கப்பட்டு நல்ல முடிவை உடனே அடைவார்கள். நீதி பெறவோ, தீர்வு பெறவோ, காலதாமதமோ, லஞ்சமோ, தடைகளோ இல்லாமல் உடனடி நீதி கிடைக்கும் என்பதை அறியலாம்.
………………
ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
களை களைந்த அருணகிரி கழலிணைப் போற்றிட
களை களைய அருள்வான் கந்தனே!
மாசற்ற அருணகிரி மலரடி போற்றிட
ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்.
நாரத மகரிஷியை நாளும் போற்றிட
மாறுதலும் உண்டாம் மனமும் செம்மையே!
ஆற்றலாம் நாரதனை அனுதினமும் போற்றிட
மாற்றமும் உண்டாம் மனமும் செம்மையே.
