Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3380

முருகனே கதியென்றும், அவனே ஞானத்தலைவன் என்றும், ஞானமளிப்பவன் அவனே என்றும், உணர்ந்து உணவிலே சைவமும், தவறாது முருகனது திருவடிகளை மறவாது பூஜை செய்தும், தான தருமங்களை முறையாக செய்தும், தூய நெறிகளை கடைப்பிடித்து ஜீவகாருண்ய வழி நடந்து வரவர, முருகனின் அருள்கூடி தேகத்தினை மாற்றி ஞானதேகமாக ஆக்கிட வாய்ப்பும் வல்லமையும் பெற்று ஞானிகள் புடைசூழ ஞானியர் கூட்டம் உடன் துணைபுரிய ஞானத்தலைவன் வாசிநடத்தி கொடுக்க, நானிலம் போற்ற நன்னயமாய் தவங்களும் யோகங்களும் செய்துமே ஞானநிலையடைந்து மரணமிலாப் பெருவாழ்வையும் … Read more

குரு உபதேசம் – 3379

உயிர்க்கொலை செய்து புலால் உண்டு கொண்டே, இறைவனாம் முருகனது ஆசியை ஒருபோதும் பெற இயலாது என்பதை தெளிவாக உணர்வதோடு, இறைவன் முருகன் ஆசியில்லாமல் பாவவினை நீக்கமோ, ஆன்மீக வாழ்விலும் சரி, இல்லற வாழ்விலும் சரி அணுவளவும் முன்னேற முடியாது என்பதையும் உணர்வான்.

குரு உபதேசம் – 3378

முருகன் அருள்கூடி தான தருமங்களை தவறாது செய்து செய்து, முருகனின் அருளாசிகளைப் பெற்றும் பிற உயிர்களின் மனமகிழ்வை பெற்றாலும், நாம் அருள் பெற தடையாய் இருப்பது முதலில் நாம் உண்ணுகின்ற உணவிலேதான் பெரும்பாவம் செய்கிறோம் என்பதை உணர்வான். ஆதலினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து முதலில் சைவத்திற்கும், பிறகு சுத்த சைவத்திற்கும் அதன் பின் வீரசைவ நெறிக்கும் அதன்பின் அதிவீர சைவநெறிக்கும் வந்து காமத்திற்கு காரணமாய் உள்ள இத்தேகத்தினை கட்டுப்படுத்தி காமத்தினால் விளையும் வினைகளை குறைத்திடுவான்.

குரு உபதேசம் – 3376

எந்த காமதேகம் பிறவிக்கு காரணமாக இருக்கின்றதோ அந்த காமதேகமே பிறவியை ஒழிப்பதற்கும் காரணமாய் இருப்பதை ஞானிகளை வணங்கியதால் அறிந்து கொண்ட போதும் அதை நம்மால் கடைப்பிடித்து அதன் அற்புத இரகசியங்களை அறியஒட்டாமல் செய்வது நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவங்கள்தான் என்பதை உணர்வான்.

குரு உபதேசம் – 3375

முதன்மைத் தலைவன் முருகன் என்பதை அறிந்தும், அவரது ஆசியினால்தான் நவகோடி சித்தர்களும் உருவாகியுள்ளனர் என்பதையும் அறியலாம். எனவே அகத்தீசா என்றாலும், அருணகிரிநாதா என்றாலும் பதஞ்சலிமுனிவா என்றாலும், பட்டினத்தடிகள் என்றாலும், நந்தீசா என்றாலும், நந்தனார் என்றாலும் நவகோடி சித்தர்களுள் யாரை அழைத்தாலும், அழைப்பது யாரை அழைத்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் முருகனது திருவடிகளையே சென்றடையும். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று சொல்லுங்கள். நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை பெறுங்கள். சுருதியாம் அருணகிரி சொல்லிய அலங்காரம் கருதியே … Read more

குரு உபதேசம் – 3374

குற்றமற்ற அருணகிரி கூறிய அலங்காரம் கற்றறிய வேண்டுமே கருத்து. பற்றற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் கற்றறிய வேண்டுமே கருத்து. நலம் பெற்ற அருணகிரி நாட்டிய அலங்காரம் பலம் பெறவே கற்றிடுவர் பணிந்து. பலம் பெற்ற அருணகிரி பாடிய அலங்காரம் நலம் பெறவே கற்றிடுவர் நயந்து. அல்லலற்ற அருணகிரி அருளிய அலங்காரம் தொல்லையற வாழ்வோர்க்கு துணையாம். துணையாம் அருணகிரி தோற்றிய அலங்காரம் தினையளவேனும் கற்க திடமே.

குரு உபதேசம் – 3373

ஞானமென்பதே முருகன் திருவடிதான் என்றும், அவன் திருவடியைப் பற்றி பூசிப்பதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்றும், அவன் திருவடிப் பூசையே மரணமிலாப் பெருவாழ்வை தரும் என்றும் அறியலாம். முருகப்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வை முதன் முதலில் பெற்றவன் என்று உணர்வதோடு ஒரே தன்மை உடையவனாய் இருப்பவன். முருகப்பெருமானுக்கு உடல் வளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் இல்லை. ஓவியம் போன்று என்றும் மாறா அழகனாய் ஒரே தன்மையனாய் இருப்பவன் அத்தகைய அழகன், அமரன், ஆற்றல் பொருந்திய ஆறுமுகப் பெருமான் திருவடியைப் போற்றுவோம் அனைத்து … Read more

குரு உபதேசம் – 3372

ஏழைகளுக்கும், பிற உயிர்களுக்கும் பசியாற்றுவிப்பதற்குரிய வாய்ப்பையும் பெறலாம். தாம் அறிந்த உண்மைப் பொருளாம் ஞானக்கருத்தை சொல்வதற்கான அறிவையும் பெறலாம்.

குரு உபதேசம் – 3371

ஒப்பற்ற ஞானத்தலைவனாய் விளங்கி நின்ற முருகப்பெருமான் ஆசியினை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சிகளை முருகன் வகுத்த தூயநெறிதனிலே சென்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதே சிறப்பறிவாகும். சன்மார்க்க வாதிகளாகிய நமக்கு தலைவன் யாரெனின், கிடைத்தற்கரிய பெருந்தலைவன் முருகப்பெருமான் என்றே அறிந்து போற்ற வேண்டும். ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.

குரு உபதேசம் – 3370

மனிதவர்க்கத்திலேயே முதன்முதலில் உடல்மாசு, உயிர்மாசு, மனமாசுகளை கண்டறிந்து நீக்கி வெற்றி பெற்று மகானாக மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவனாக யாவருக்கும் எட்டா அருட்ஜோதி நிலைதனை அடைந்து முற்றுப்பெற்றவன் மகான் முருகப்பெருமான் மட்டுமே. அவனே இவ்வுலகின் தோன்றிய உயிர்கள் ஏன் தோன்றுகிறது? ஏன் வளர்கிறது? ஏன் இறக்கிறது? என்பதற்கும் அவை வாழும் போது சீராக வாழாமல் நரை, திரை, மூப்பை அடைவது ஏன்? ஏன் நோயுறுகிறது? ஈளை இருமல் எதனால் வந்தது? மூப்பை வெல்லுவது எப்படி? நரை, திரை வராமல் … Read more