Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3344

பற்றற்ற ஞானியும், முற்றுப்பெற்ற முனிவனுமாகிய முருகப்பெருமான் திருவடியைப் பற்றுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம். உற்றநல் அருணகிரி ஓதிய அலங்காரம் கற்றறிந்தாலே உண்டாம் களிப்பு. களிப்புற்று அருணகிரி களறிய அலங்காரம் சலிப்பின்றி கற்றிட தான் அவனாமே. அறத்தை வலியுறுத்தி அருளிய அலங்காரம் அறமே துணை என அறிதல் அறிவே. சிந்தித்தால் முருகனை சிந்திக்க வேண்டும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற.

குரு உபதேசம் – 3343

சிந்தித்தால் கந்தனையே சிந்திக்க வேண்டும் என்று அறியலாம். ஒப்பற்ற அருணகிரி ஓதிய அலங்காரம் தப்பின்றி கற்றிட தான் அவனாமே. அருளாளன் அருணகிரி அருளிய அலங்காரம் அருளாளரே கற்று அகம் மகிழ்வர். ஒரு சொல்லே வேதம் என்று உரைத்த அனுபூதி ஒரு சொல்லே வேதம் என்று உணர்தல் அறிவே. உயிர்களெல்லாம் முருகன் என்று உரைத்த அனுபூதி உயிர்களெல்லாம் முருகன் என்றே உணர்தல் அறிவே கந்தனைப் போற்றுவோம்! கடப்போம் பிறப்பை!!

குரு உபதேசம் – 3342

கடவுள் உண்டென்று நம்புகின்ற ஆன்மீகவாதிகள் உண்மை அறிவைப் பெற்று கடவுள் நம்பிக்கையில் மேலும் மேலும் நம்பிக்கை ஊட்டி அருள் செய்திடுவான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் – 3341

முருகன் காட்டிய ஜீவதயவின் பாதையில் செல்வான் முருகனின் பக்தரெல்லாம். ஆறுமுகன் திருவடியை போற்றுவோம் அருளையும், பொருளையும் பெறுவோம். புலவனாம் அருணகிரி புகன்ற அலங்காரம் புலவர்களே கற்று போற்றியே மகிழ்வர். பற்றற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் பற்றறவே கற்பர் பரிந்து. பதம் பெற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் பதம் பெறவே கற்பர் பணிந்து.