Editor
குரு உபதேசம் – 3367
நாம் செய்த புண்ணியத்தால் தான் நமக்கு தலைவனாக உண்மை ஞானதெய்வம் முருகப்பெருமானே நமக்கு வழிபாட்டிற்குரிய தெய்வமாய் அமைந்திட்டதையும் உணரலாம். அருளாளன் அருணகிரி அருளிய அலங்காரம் அருளாளர் கற்றே அகம் மகிழ்வர். பொருளறிந்த அருணகிரி புகன்ற அலங்காரம் பொருளறிந்து கற்பவரே புண்ணியர். உடைய அருணகிரி ஓதிய அலங்காரம் தடையற கற்றிட தான் அவனாமே. வேதனாம் அருணகிரி விளம்பிய அலங்காரம் காதலாய் கற்றிட காணலாம் வீட்டை.
குரு உபதேசம் – 3366
முருகனை வணங்குவோர் பூகம்பத்தாலும், புயலாலும், ஆழிப்பேரலையாலும், நீரால், நெருப்பால், கொலைக்கருவியால், எரிமலையால், கடும்பனியால், கொடிய வெயிலால், வெள்ளத்தால், அதிநுட்பமான கொலைக்கருவிகளாலும், பகைவர்களாலும், அரூபநிலை நின்று தாக்கும் பேய், பூத, பைசாச கணங்களாலும் இடையூறு ஏதும் வராது என்று அறியலாம். எல்லாவற்றையும் அந்த பக்தனின் பக்திக்கு மெச்சி அந்த ஆதி ஞானத்தலைவனே அனைத்தையும் பக்தனுக்காக தாமே தாங்கி தம்மை நம்பிய பக்தனுக்கு பாதுகாப்பாய் நின்று காத்தருள் புரிவான் என்பதை அறியலாம்.