Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3362

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.

குரு உபதேசம் – 3361

நாம் செய்த புண்ணியத்தால் தான் நமக்கு தலைவனாக உண்மை ஞானதெய்வம் முருகப்பெருமானே நமக்கு வழிபாட்டிற்குரிய தெய்வமாய் அமைந்திட்டதையும் உணரலாம். அருளாளன் அருணகிரி அருளிய அலங்காரம் அருளாளர் கற்றே அகம் மகிழ்வர். பொருளறிந்த அருணகிரி புகன்ற அலங்காரம் பொருளறிந்து கற்பவரே புண்ணியர். உடைய அருணகிரி ஓதிய அலங்காரம் தடையற கற்றிட தான் அவனாமே. வேதனாம் அருணகிரி விளம்பிய அலங்காரம் காதலாய் கற்றிட காணலாம் வீட்டை.

குரு உபதேசம் – 3360

முருகனை வணங்குவோர் பூகம்பத்தாலும், புயலாலும், ஆழிப்பேரலையாலும், நீரால், நெருப்பால், கொலைக்கருவியால், எரிமலையால், கடும்பனியால், கொடிய வெயிலால், வெள்ளத்தால், அதிநுட்பமான கொலைக்கருவிகளாலும், பகைவர்களாலும், அரூபநிலை நின்று தாக்கும் பேய், பூத, பைசாச கணங்களாலும் இடையூறு ஏதும் வராது என்று அறியலாம். எல்லாவற்றையும் அந்த பக்தனின் பக்திக்கு மெச்சி அந்த ஆதி ஞானத்தலைவனே அனைத்தையும் பக்தனுக்காக தாமே தாங்கி தம்மை நம்பிய பக்தனுக்கு பாதுகாப்பாய் நின்று காத்தருள் புரிவான் என்பதை அறியலாம்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!! ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்தஇயதியா, தமிழகத்தில் இயத வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்