குரு உபதேசம் – 3359
முற்றுப்பெற்ற முனிவனாகிய முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்க பூசிக்க, முன்செய்த பாவங்கள் தீரும், பாவங்கள் தீரதீர உண்மைப்பொருளை அறியக்கூடிய சிறப்பறிவைப் பெறலாம். முருகனைப் போற்றுவோம் முன்னும் பின்னும் பிறவிகள் பெற்றதை உணர்வோம். உவகையாம் அருணகிரி ஓதிய அலங்காரம் தகைமையாய் கற்றிட தான் அவனாமே. வசையற்ற அருணகிரி வழங்கிய அலங்காரம் இசைபெற கற்றிடுவர் இனிதே.