Editor
குரு உபதேசம் – 3354
இன்பமே முருகன் என்று அறிந்தே முருகனைப் பற்றி இன்பமே வாழ்வாய் அமைந்திட வாழ்வோம். புண்ணியன் அருணகிரி புகன்ற அலங்காரம் எண்ணிய தோறும் இனிக்குமே நெஞ்சம். தடையற்ற அருணகிரி சாற்றிய அலங்காரம் தடையற கற்றிட தான் அவனாமே. ஏதமற்ற அருணகிரி இயற்றிய அலங்காரம் வேதமென்றே போற்றுவோர் வித்தகரே. ஆற்றலாம் அருணகிரி அருளிய அலங்காரம் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. புண்ணியனாம் அருணகிரி புகன்ற அலங்காரம் நண்ணியே கற்பவர் நலம் பெறுவர். நலம் பெற்ற அருணகிரி நாட்டிய அலங்காரம் நலம் பெறவே கற்றிடுவர் நயந்து.
குரு உபதேசம் – 3353
உலக மகா தலைவன் முருகப்பெருமான்தான் என்றும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியை பற்றினாலன்றி, அவனருள் பெற்றாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்ற நிதர்சனமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.
குரு உபதேசம் – 3352
முருகன் அருள் கூடிய தவத்தில் சித்தியும் பெறுவார்கள். வெறும் உணவுக் கட்டுப்பாட்டாலோ, துறவாலோ தவசித்தி பெறமுடியாதென்றும் முருகன் அருள் கூடினாலன்றி தவம் சித்திக்காதென்றும், தவம் சித்திபெற உணவுக்கட்டுப்பாடும் அவசியம், துறவும் அவசியம் என்பதையும் உணர்வான், உணர்ந்த அவன் தவமே முருகனென்றும், முருகனே தவமென்றும், முருகன் அருளே தவசித்தி என்றும், முருகன் அருள் இன்றி தவசித்தி கைகூடாதென்பதையும் உணர்ந்திடுவான். நித்தியன் அருணகிரி நிகழ்த்திய அலங்காரம் நித்தமும் கற்றிட நிலைபெறுமே நித்தியம். அம்மம்மா அருணகிரி அருளிய அலங்காரம் அம்மம்மா என்றே அகம் … Read more