Editor
குரு உபதேசம் – 3347
முருகப்பெருமானே முழுமுதற் கடவுள் என்றும் முருகனது அருளைப் பெற ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால் அவன் அருள் பெறலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள். கந்தனைப் போற்றியே வந்தனை செய்வோம் நிந்தனை இல்லாத வாழ்வை பெறுவோம். புலன் வென்ற அருணகிரி புகன்ற அலங்காரம் நலம் பெற கற்றிட நலமே. வளம் பெற்ற அருணகிரி வழங்கிய அலங்காரம் நலம் பெற கற்றிட நலமே.
குரு உபதேசம் – 3346
வரவிற்கு உட்பட்டு வாழக் கற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் மேலும் பொருளை ஈட்டி புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய அறிவைப் பெறலாம். படைகொண்ட அருணகிரி பாடிய அலங்காரம் தடையின்றி கற்றிட தானவனாமே. உறுதி கொண்ட அருணகிரி ஓதிய அலங்காரம் கருதியே கற்றிட காணலாம் வீட்டை. இணையடி துணையென்றே இயம்பிய அலங்காரம் இணையடி துணையென்றே இருந்திட நலமே. புண்ணியனாம் முருகபிரான் பொன்னடி போற்றுவோம்! எண்ணிய அனைத்தும் எளிதில் பெறுவோம்.
குரு உபதேசம் – 3345
காமவிகாரம் கட்டுக்கு அடங்கும், பேராசை இருக்காது, பொறாமை இருக்காது, கோபம் நீங்கி சாந்தம் உண்டாகும், பிற உயிர்கள்பால் கருணை உண்டாகும். முருகப்பெருமான் காமம் அற்றவன், பேராசை அற்றவன், பொறாமை இல்லாதவன், கோபம் அற்றவன், ஜீவதயவே வடிவானவன், அத்தகைய குணக்குன்றாம் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதை உணர்வான். கந்தனைப் போற்றினால் நிந்தனை இல்லை என்று அறியலாம். அப்பப்பா அருணகிரி அருளிய அலங்காரம் அப்பப்பா என்றே அகம் மகிழ்வரே அறிஞர். ஆசற்ற அருணகிரி அருளிய அலங்காரம் ஆசற … Read more