Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4134

முருகா என்றால், முதன்மைத் தலைவன் முருகன் என்பதை அறிந்தும், அவரது ஆசியினால்தான் நவகோடி சித்தர்களும் உருவாகியுள்ளனர் என்பதையும் அறியலாம். எனவே அகத்தீசா என்றாலும், அருணகிரிநாதா என்றாலும் பதஞ்சலிமுனிவா என்றாலும், பட்டினத்தடிகள் என்றாலும், நந்தீசா என்றாலும், நந்தனார் என்றாலும் நவகோடி சித்தர்களுள் யாரை அழைத்தாலும், அழைப்பது யாரை அழைத்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் முருகனது திருவடிகளையே சென்றடையும். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று சொல்லுங்கள். நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை பெறுங்கள்.

குரு உபதேசம் – 4133

முருகா என்றால், ஏழைகளுக்கும், பிற உயிர்களுக்கும் பசியாற்றுவிப்பதற்குரிய வாய்ப்பையும் பெறலாம். தாம் அறிந்த உண்மைப் பொருளாம் ஞானக்கருத்தை சொல்வதற்கான அறிவையும் பெறலாம்.

குரு உபதேசம் – 4132

முருகா என்றால், அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.  

குரு உபதேசம் – 4131

முருகா என்றால், முருகனை வணங்குவோர் பூகம்பத்தாலும், புயலாலும், ஆழிப்பேரலையாலும், நீரால், நெருப்பால், கொலைக்கருவியால், எரிமலையால், கடும்பனியால், கொடிய வெயிலால், வெள்ளத்தால், அதிநுட்பமான கொலைக்கருவிகளாலும், பகைவர்களாலும், அரூபநிலை நின்று தாக்கும் பேய், பூத, பிசாச கணங்களாலும் இடையூறு ஏதும் வராது என்று அறியலாம். எல்லாவற்றையும் அந்த பக்தனின் பக்திக்கு மெச்சி அந்த ஆதி ஞானத்தலைவனே அனைத்தையும் பக்தனுக்காக தாமே தாங்கி தம்மை நம்பிய பக்தனுக்கு பாதுகாப்பாய் நின்று காத்தருள் புரிவான் என்பதை அறியலாம். நாம் செய்த புண்ணியத்தால் தான் … Read more

குரு உபதேசம் – 4130

முருகா என்றால், முற்றுப்பெற்ற முனிவனாகிய முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்க பூசிக்க, முன்செய்த பாவங்கள் தீரும், பாவங்கள் தீரதீர உண்மைப்பொருளை அறியக்கூடிய சிறப்பறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 4129

முருகா என்றால், புலால் உண்ணுகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம், மது அருந்துகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம், சூதாடுகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம்.

குரு உபதேசம் – 4128

முருகா என்றால், முருகப்பெருமானே முழுமுதற் கடவுள் என்றும் முருகனது அருளைப் பெற ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால் அவன் அருள் பெறலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.

குரு உபதேசம் – 4127

முருகா என்றால், வரவிற்கு உட்பட்டு வாழக் கற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் மேலும் பொருளை ஈட்டி புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 4123

முருகா என்றால், பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், லோபித்தனம் நீங்கும், புலால் உண்ணுகின்ற பழக்கம் நீங்கி சைவ உணவை மேற்கொள்வார்கள். மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். ஆதித்தலைவன் முருகன் அருளால் இவ்வித பழக்கங்களிலிருந்து நீங்கியே பிறவிக்கு காரணமாயுள்ள இப்பழக்கங்களை ஒழித்து பிறவா நிலைதனை அடையும் மார்க்கத்தின் வழிதனிலே சென்று பிறவிப் பிணியையும் நீக்குவார்கள் முருகனின் பக்தர்கள்.

குரு உபதேசம் – 4122

முருகா என்றால், உடல்மாசு, உயிர்மாசு, மனமாசு நீங்குவதற்கு பக்தியினால் மட்டுமே முடியும், வேறு எதொன்றினாலும் அடைய இயலாது என்பதை உணரலாம்.