குரு உபதேசம் – 3479
முருகனை வணங்கிட, சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து, சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முருகனை வணங்கிட, சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து, சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முருகனை வணங்கிட, முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தமிழை கற்பதும், பரப்புவதும், தொண்டாக செய்கின்ற மக்களுக்கு ஞானவாழ்வு கைகூடும் என்பது உண்மையே என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகின்ற மக்கள், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பன்னிரண்டு மணிக்கு முடிந்தால் பத்து நிமிடமும் நாமஜெபத்தினை சலிப்பில்லாமல் செய்து வந்தால் முருகன் அருள் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
முருகனை வணங்கிட, உலக உயிர்களிடத்து எந்த அளவிற்கு ஜீவதயவை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த ஜீவதயவே தவமாய் மாறி, ஜீவதயவின் தலைவன் முருகனது ஆசியைப் பெற்று, தவத்தினால் வெற்றி பெற்று தன்னையறியும் சிறப்பறிவான சாகாக்கல்வியை கற்று ஞானம் அடையக் கூடும் என்பதையும் அறியலாம்.