Prasanna
குரு உபதேசம் – 3472
முருகனை வணங்கிட, புண்ணியவான்களுக்கெல்லாம் புண்ணியவான்களாக உள்ள, புண்ணியவான்களுக்கெல்லாம் புண்ணியவானாகி நிற்கின்ற, புண்ணியவான்களுக்கெல்லாம் புண்ணியவானாகிய, மேம்பட்ட புண்ணியவானாய் நிற்கும் முருகப்பெருமான் திருவடியை பூசித்தால்தான், அரிதினும் அரிதாய் உள்ள மெய்ப்பொருளை அறியலாம்.
குரு உபதேசம் – 3471
முருகனை வணங்கிட, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிமார்களின் ஆசியையும், அஷ்ட திக்கு பாலகர்களின் ஆசியையும், தேவாதி தேவர்கள் ஆசியையும், தேவதைகளின் ஆசியையும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3470
முருகனை வணங்கிட, பாவபுண்ணியத்தை அறிந்து கடந்த முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்காவிட்டால், பாவபுண்ணியத்தைப் பற்றி கடுகளவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம்.