Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4121

முருகா என்றால், பசித்த ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்ற உணர்வு வரும். உணவளிப்பது சிறப்பு என்பதை உணர்ந்து அந்த உணவை கடவுளால் படைக்கப்பட்ட பிற ஜீவர்களுக்கு கொடுக்கும் போது உள்ளமும், முகமும் மலர்ந்திட கனிவு கொண்டு உண்போர் மனம் மகிழ சுவையுடன் அவர்கள் உண்டு மகிழ்வதை கண்டு ரசிக்கின்ற மென்மையான மனமும் முருகன் அருளால் கிடைத்திடும். உண்டோர், உண்டு உளமும், உடலும், ஆன்மாவும் மகிழ்கின்ற தருணத்திலே கடவுள் ஒளி பிரகாசிக்கின்றதையும், ஜீவதயவு ஓங்கி நிற்கின்றதையும் பசித்தோர் முகம் … Read more

குரு உபதேசம் – 4120

முருகா என்றால், எந்தெந்த செயலை மேற்கொண்டால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்ற அறிவைப் பெறலாம். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 4119

முருகா என்றால், லோபித்தனம் நீங்கும், செல்வம் பெருகும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றும் எண்ணம் வரும், தயைசிந்தையும் பெருகி உயிர்க்கொலை செய்வது பாவம் என்று உணர்ந்து பிற உயிர்க்கு தீங்கு நினையாத ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்கும் ஆற்றலும் உண்டாகும்.

குரு உபதேசம் – 4118

முருகா என்றால், பக்தி செலுத்துவதற்கும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதற்கும் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கும் அருள் செய்வான் முருகன் என்று அறியலாம்.

குரு உபதேசம் – 4117

முருகா என்றால், சைவ உணவை மேற்கொள்ளவும், மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்வதும் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடியதே என்பதை சந்தேகமற உணரலாம். முருகனது அருளைப் பெற சைவமும் அன்னதானமுமே சிறந்தது என்ற அறிவையும் பெறலாம்.

குரு உபதேசம் – 4116

முருகா என்றால், எந்த அளவிற்கு அன்னதானம் செய்கிறோமோ அந்த அளவிற்கு மனசாந்தமும் உடல் வலிமையும் உண்டாகும் என்று அறியலாம்.

குரு உபதேசம் – 4115

முருகா என்றால், ஞானசித்தர் காலத்திலே தொண்டுகள் செய்து வருகின்ற காலங்களிலே எதையும் சகித்து கொள்கின்ற பக்குவத்தை ஞானபண்டிதன் கருணையால் பெறலாம்.

குரு உபதேசம் – 4114

முருகா என்றால், பொறிபுலன்கள் தீயவழியில் செல்லாது தடுத்து ஆட்கொண்டு நம்மைக் காப்பாற்றும் வல்லவன் முருகப்பெருமான் என்று அறியலாம்.

குரு உபதேசம் – 4113

முருகா என்றால், இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக இருத்தல் என இவையனைத்தும் இல்லற கடமைகள் … Read more

குரு உபதேசம் – 4112

முருகா என்றால், உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள கற்றுக்கொண்டவன் உணவை அளவறிந்து உண்ணுகின்ற அறிவைப் பெறுவான்.