குரு உபதேசம் – 4111
முருகா என்றால், முன்செய்த வினை காரணமாக நண்பனையே பகைவனாக பார்க்கின்ற சூழ்நிலை வந்தாலும் முருகன் அருள் கூடி அவன் தனக்கு உணர்த்தி நண்பனை நண்பனாக ஆக்கிக் கொள்ள அருள் செய்வான் முருகன்.
முருகா என்றால், முன்செய்த வினை காரணமாக நண்பனையே பகைவனாக பார்க்கின்ற சூழ்நிலை வந்தாலும் முருகன் அருள் கூடி அவன் தனக்கு உணர்த்தி நண்பனை நண்பனாக ஆக்கிக் கொள்ள அருள் செய்வான் முருகன்.
முருகா என்றால், பிறவாமைக்கு உரிய அறிவைப் பெற்று அந்த பிறவாமையை அடைவதற்கான தவங்களை மேற்கொண்டு தவமுயற்சிகளில் வெற்றி பெற்று பிறவாமையெனும் நிலையையும் அடையலாம்.
முருகா என்றால், புண்ணிய பலமும் அருள் பலமும் பெருகுவதோடு நாம் விரும்பிய அனைத்தையும் அடைய அருள் செய்வான் முருகப்பெருமான்.
முருகா என்றால், ஒரு உயிர், கொலை செய்யப்படும்போது அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை அறியக்கூடிய உணர்வை தந்து, பிறஉயிர்களுக்கு இனி மேலும் துன்பம் செய்யக்கூடாது என்ற உறுதியைதந்து இதுவரை நாம் செய்த இந்த மகாபாதக செயலின் பாவத்திலிருந்து விடுபட முருகனிடத்து மன்றாடுவான்.
முருகா என்றால், வெப்பமாகிய சூரியகலையையும், குளிர்ச்சியாகிய சந்திரகலையையும், சேர்த்து ரேசித்து பூரித்து கும்பித்து ஸ்தம்பித்தால் அதுவே மோனமென்றும் பிரம்மம் என்றும் அறியலாம். இதை அடைய வேண்டுமென்றால் சுத்த சைவத்தை கடைப்பிடித்தும் காலை மாலை “ஓம் முருகா” என்று குறைந்தது பன்னிரண்டு முறையேனும் நாமத்தை சொல்லியும் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அன்னதானம் செய்து வந்தால் முருகன் அருளால் மோனநிலையாகிய பிரம்மநிலையை அறியலாம், அறிந்து அடையலாம்.
முருகா என்றால், சத்தியமும் பொதுநலமும் உள்ள ஒவ்வொருவரின் நோக்கங்களையும் அதில் உள்ள தடைகள் நீங்கி முருகன் அருள் துணைவர நோக்கங்களெல்லாம் நிறைவேறிட காண்பர்.
முருகா என்றால், நமது சிந்தையும் தெளிவாய் இருக்கும், செயலும் தூய்மையாய் இருக்கும், சொல்லும் தூய்மையாய் இருக்கும். சிந்தை, செயல், சொல் அனைத்தும் தூய்மையாய் இருக்க முருகப்பெருமான் அருள் துணையாய் இருக்கும் என்பதை அறிந்து தெளியலாம்.
முருகா என்றால், நாம் மேற்கொள்கின்ற அனைத்து செயல்களையும் உண்மையுள்ளதாகவும், பிற உயிர்க்கு எவ்வித தீங்கும் நேரா வண்ணமும், நீதி நெறிக்கு உட்பட்டதாயும் செய்து முடிப்பதோடு செய்யும் செயல்களிலே உள்ள பாவங்களை நீக்கி அனைத்தும் புண்ணிய செயல்களாகவே செய்திட, அந்த ஆதி ஞானசோதி சொரூபன் முருகன் துணைவர அற்புதமாய் செய்து மாபெரும் புண்ணியவான்களாகவே ஆகி முருகன் அருள் கூடிட அருளாளனாகவும் புண்ணியவானாகவும் மாறிடலாம்.
முருகா என்றால், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும், நாம் முன்செய்த நல்வினையால் வந்தது, மேலும் முருகப்பெருமான் ஆசி துணை கொண்டு பூசை செய்தும் புண்ணியம் செய்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை உணர்வான்.
முருகா என்றால், ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுவதற்கான அறிவை முருகன் தயவால் பெறலாம். நன்மை தீமை அறிந்து தீமைவிலக்கி நன்மையை மேற்கொள்ளலாம்.