Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4281

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இந்த தேகமே அசுத்தமான கலவையால் உண்டாகியிருப்பதினாலே இந்த அசுத்தமான தேகத்தில் உண்டாகும் சிந்தையும் மாசுபட்டிருப்பதை அறியலாம். இந்த அசுத்த கலவையின் மாசினால் எல்லாம் அறிந்தது போல் உணர்வும், உண்மைப் பொருளை அறியாமலேயே அறிந்தது போல ஒரு பலகீனமும் இருக்கும். யாரேனும் உண்மைப் பொருள் அறிந்த மெய்ஞ்ஞானிகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இருக்காது. எனினும் இவ்வித பலகீனங்களிலிருந்து நீங்கி மெய்ஞ்ஞானிகள் கருத்தை ஏற்கின்ற பக்குவம் பெற விரும்புகின்றோர் மாசற்றவனும், ஆயிரம் … Read more

குரு உபதேசம் 4280

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : காமதேகத்தால் வருகின்ற கொடுமையை உணரச்செய்து காமதேகத்தை நீர்த்திட செய்து ஒளி உடம்பை பெறுவதோடு உயர்ந்த சிந்தனை, உயர்ந்த சொல், உயர்ந்த செயல் என்பவை உண்டாகும் என்பதை அறியலாம். மாதவ முருகனின் மலரடி போற்றிட ஆதவன் போலவே அறிவு மிளிருமே.

குரு உபதேசம் 4279

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதான அறம், பொருள், இன்பம், வீடு பேறாகிய நான்கையும் அறியச் செய்தும், அதனை உணரச் செய்தும் அதை கடைப்பிடிக்கக் கூடிய வழிமுறையை அருளியும் அருளிக் காப்பவன் முருகப்பெருமான் ஒருவனே என்பதை அறியலாம். அம்மை குண்டலி அருளிய முருகனே நம்மையும் காப்பான் என்றே போற்றுவோம். போற்றுவோம் முருகனின் பொன்னடி பெருமையை ஏற்றம் பெறுவோம் என்றும் இறவா நிலையே. அம்மை குண்டலி அருளிய முருகனே நம்மையும் … Read more

குரு உபதேசம் 4278

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானத்திற்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து உலக நடையில், உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும், முடிந்தால் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ நாமஜெபங்களை மந்திரஜெபமாக கூறி முருகப்பெருமான் திருவடிகளை உளமார உருகி பூஜித்திட வேண்டும். ஜீவதயவின் தலைவனான முருகனின் ஆசியை பெற வேண்டுமாயின், முதல் … Read more

குரு உபதேசம் 4277

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ளவும் சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஜீவதயவை மேற்கொள்ளவும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முருகப்பெருமானே அருள் செய்வான் என்பதை அறியலாம். அந்தமில் இன்பம் அருளும் முருகனை செந்தமிழால் போற்றுவார் திடமே. பெருந்தகை முருகனை பேணியே தொழுதிட இருவினையில்லை இடருமில்லையே. முப்புரம் எரித்த முக்கண் மைந்தனை தப்பின்றி பூசிக்க தானவனாமே.

குரு உபதேசம் 4272

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கைகள் பெற்ற பயனே பிறருக்கு கொடுப்பதுதான். அப்படி பிறருக்கு கொடுப்பதற்காகவே அளிக்கப்பட்ட கைகளை தர்மம் செய்ய பயன்படுத்தாவிட்டால் கைகள் இருந்தும் பயனில்லை என்பதை அறியலாம். பன்முகமாக பரவும் சிந்தையை சண்முகன் திருவடி சார்தல் நலமே. சிதறும் சிந்தையை திருவடி செலுத்திட பதரும் நெல்லாகும் பயனே! திக்கெல்லாம் போற்றும் திருவடி நமக்கே தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.

குரு உபதேசம் 4271

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : ஞானசித்தர் காலம் தொடங்கி விட்டபடியினாலே ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறுகின்ற வாய்ப்பை பெற்று, தொண்டு செய்திட வேண்டுமாயின் முருகப்பெருமானின் ஆசி பெற்றால்தான் பங்கு பெற முடியுமென்றும், ஞானசித்தர் காலத்திலே முருகனது அருளைப் பெற்று தொண்டுகள் செய்து ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஆசி பெற வேண்டுமாயின், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவை மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல், “ஓம் … Read more

குரு உபதேசம் 4270

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட : முதன் முதலில் நரை, திரை, மூப்பு, பிணி மரணத்தை வென்ற முதல் தலைவன் ஞானபண்டிதன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமான் ஆசியைப் பெற்றால் நாமும் இவ்வித உன்னத நிலையைப் பெறலாம் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் ஆசியைப் பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு தினம்தினம் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி குறைந்தது காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும் முடிந்தால் … Read more