குரு உபதேசம் 4272
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கைகள் பெற்ற பயனே பிறருக்கு கொடுப்பதுதான். அப்படி பிறருக்கு கொடுப்பதற்காகவே அளிக்கப்பட்ட கைகளை தர்மம் செய்ய பயன்படுத்தாவிட்டால் கைகள் இருந்தும் பயனில்லை என்பதை அறியலாம். பன்முகமாக பரவும் சிந்தையை சண்முகன் திருவடி சார்தல் நலமே. சிதறும் சிந்தையை திருவடி செலுத்திட பதரும் நெல்லாகும் பயனே! திக்கெல்லாம் போற்றும் திருவடி நமக்கே தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.