admin
குரு உபதேசம் 4237
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம். அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது … Read more
குரு உபதேசம் 4236
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்களுக்கு செய்கின்ற நன்மையே நமது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும் என்பதை அறியலாம். ஆன்ம ஆக்கம் கூடிட கூடிட அறிவும் மென்மையாக மாறி சிறப்பறிவாக மாறிடும். இதை முருகப்பெருமான் அருளினால் பெறலாம் என்பதையும் அறிந்து ஜீவதயவின் வழி ஆன்மாவை ஆக்கப்படுத்தி சிறப்பறிவையும் பெறலாம். அருளாளன் முருகனை அனுதினமும் போற்றிட இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.
குரு உபதேசம் 4235
முருகனை வணங்கிட : செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய செயல்களாகவே அமைவதை அறியலாம். முற்றும் உணர்ந்த முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெறுவதனாலே நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற செயல்களாகவே அமையும். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்.
குரு உபதேசம் 4234
முருகனை வணங்கிட : தன்னையறிந்து தன்னை வென்ற தகைமை பெற்ற முருகனை பூஜித்து ஆசி பெற்ற மக்கள் கோடானுகோடிபேர். இன்னும் பலகோடி மக்கள் அவனது அருள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற இருக்கிறார்கள். அப்படி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக் கூடியவர்களில் நாமும் ஒருவனாக இருந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உண்மை ஞானவழிதனை தெரிந்து பூஜிப்பான். தன் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற மக்களுக்கு அருள் செய்யக்கூடிய ஆற்றல் முருகப்பெருமானுக்குத்தான் உண்டு … Read more
குரு உபதேசம் 4233
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் … Read more
குரு உபதேசம் 4232
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : காமுகனாகவும், பொருள் பற்றுடையவனாகவும் உள்ள பொய் வேடதாரிகளை இனம் கண்டு அவர்களை கட்டுப்படுத்தியும் பண்புள்ள இல்லறத்தானுக்கு உரிய பாதுகாப்பு தருவதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். போலி வேடதாரி ஆன்மீகவாதிகளால் நாட்டில் பருவமழை தவறும், மூடப்பழக்கங்கள் நாட்டில் அதிகமாகும், உண்மையான தெய்வபக்தி குறைந்து விடும், பாவங்கள் அதிகமாகி உலகம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் உண்டாகும் என்பதையும் அறியலாம். தெய்வத்தின் பெயரால் பொருளைப் பறிப்பதே குறிக்கோளாய் கொண்டும் … Read more
குரு உபதேசம் 4231
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சத்தும் அசத்துமாய் இருக்கின்ற உடம்பை ஒரு மென்மையான வேதியியல் செய்து சத்தையும் அசத்தையும் பிரித்தெடுக்கக் கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம். உடம்பிலுள்ள சத்தையும் அசத்தையும் பிரித்து சத்தை தன்வயமாக்கிக் கொள்ளவும் அசத்தை நீக்கவும் விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் என அனைத்திலும் சைவமாக இருந்து சுத்த சைவராக விளங்கி தினம் தினம் காலை, மாலை, இரவு என … Read more
குரு உபதேசம் 4230
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும். செந்திலம் பழனி குன்றம் திருத்தணி வடமலைவாழ் விந்தையாய் நடனம் செய்யும் வித்தகன் திருவடியை விரும்பியே போற்றுவோம்.