குரு உபதேசம் – 4174
முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.
முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.
முருகனை வணங்கிட, பக்தியும், சித்தியும், முக்தியும் தருவது முருகப்பெருமானின் திருவடிதான் என்று அறியலாம்.
முருகா என்றால், உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும், அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும், அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.
முருகா என்றால், என்றும் அழிவிலாத இளமையும், அழகும் உள்ள முருகப்பெருமானின் திருவடியை பூஜிக்க, பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.
முருகா என்றால், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற ஞானமடைதலுக்கான நான்கு படிநிலைகளையும் அறிந்து கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஞானிகளை பூசிக்க பூசிக்க பூசிப்போரும் ஞானிகள் பெற்ற அந்த முற்றுப்பெற்ற நிலையாம் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று மிக ஆற்றல் பொருந்திய இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாத பிறப்பு இறப்பற்ற ஒளிதேகத்தை பெறலாம். என்றும் போற்றுவோம் முருகப்பெருமான் திருவடியை பெறுவோம் பேரின்ப வாழ்வை.
1990-Mahan-Manikkavasagar-aruliya-arulaasi-nool-31.05.2022
ஆடி பௌர்ணமி 23-07-2021 ஆடி மாத பௌர்ணமி வருகின்ற 23/07/2021 அன்று ஓங்காரகுடிலில் காலை 7 மணி முதல் சிறப்பு அன்னதானமும் சித்தர்கள் வழிபாடும் நடைபெறும். குருநாதர் தரிசன நேரம் காலை 10.30 அன்னதானம் காலை 7 மணி முதல் மாலை 3 வரை நடைபெறும்